Monday, March 19, 2018

எப்பவும் புல்டோசர் இடிக்கும்போது புல் பூண்டுகளுக்கு சேதம் வருமில்லையா?

அப்படியொரு சேதம் இது. தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின்படி மார்ச் 16 ந் தேதியிலிருந்து ஷுட்டிங் நிறுத்தப்படுகிறது.

அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ படத்தின் ஷுட்டிங் இன்னும் 15 நாட்களில் முடிகிறது.

இதை விட்டால் இன்னும் ஆறு மாதங்கள் ஆகுமாம் அதர்வா கால்ஷீட் வாங்க.

எனக்கு மட்டும் சலுகை கொடுங்க என்று இயக்குனர் கேட்க, நோ நோ என்று உறுதியாக மறுத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

ஏற்கனவே இதே இயக்குனர் தயாரித்த இவன் தந்திரன் படம் வெளியிட்ட இரண்டு நாட்களில்தான் தியேட்டர் ஸ்டிரைக் வந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார் கண்ணன்.

இப்போது இரண்டாவது பூகம்பம்.

என்ன செய்யப் போகிறாரோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer