Wednesday, March 14, 2018

தியேட்டர்களுக்கு புதுப்படங்களின் வரத்து நின்றதால் தினந்தோறும் லட்சக்கணக்கில் லாஸ்.

கீழே விழுந்தாலும் மீசையில் முள் குத்தல கதையாக தானே முன் வந்து இன்னொரு ஸ்டிரைக்கை அறிவித்திருக்கிறது தியேட்டர் சங்கம்.

அதாவது ஏப்ரல் 1 ந் தேதி முதல் 30 சதவீத கேளிக்கை வரி என்று அறிவித்த அரசின் முடிவை எதிர்த்து நாங்களும் ஸ்டிரைக் என்று கூறிவிட்டார்கள்.

மார்ச் 16 ந் தேதியிலிருந்து படங்களை வெளியிட மாட்டார்களாம். உங்க பங்குக்கு நீங்க பண்ணுங்க.

எங்க பங்குக்கு நாங்க பண்றோம் என்கிற இந்த முடிவை கண்டு தயாரிப்பாளர் சங்கம் கதி கலங்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

அதற்கு வச்சாங்க ஆப்பு. யெஸ்... மார்ச் 16 ந் தேதியிலிருந்து எந்த ஷுட்டிங்கும் இல்லை.

பின் தயாரிப்பு பணிகளுக்கும் தடை என்று அறிவித்துவிட்டது சங்கம்.

அவ்வளவு ஏன்? போஸ்டர் ஒட்டக்கூடாது. பிரஸ்மீட் வைக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள்.

நான் பிடறிய பிடிச்சா, அவங்க குரல் வளைய பிடிக்கிறாங்களே என்று நடுங்கிப் போயிருக்கிறது தியேட்டர் வட்டாரம்.

ஆனால் இந்த சண்டை குறித்தெல்லாம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரியவில்லை. அதுதான் ஷாக்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer