அமெரிக்காவில் அண்மைக் காலமாக பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு அமெரிக்க பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி வழங்கி பயிற்சி அளிக்கும் திட்டத்தை அண்மையில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்குள் இந்த முடிவைக் கேள்விக் குறியாக்கும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. 17 மாணவர்களைப் பலி கொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பின் ஜோர்ஜியா உயர் நிலைப் பள்ளி ஒன்றிலும் அட்லாண்டா டால்டன் பள்ளியிலும் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் யாரும் பலியாகவில்லை என்றாலும் சிலர் காயம் அடைந்ததுடன் இரு தாக்குதல்களையும் மேற்கொண்டது ஆசிரியர்கள் என்பதால் டிரம்பின் திட்டத்துக்குப் பலத்த சவால் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி அளிக்கும் முடிவைக் கைவிட்டு விட்டு வேறு உபயோகமான வழிகளைக் கையாளுமாறு அரசுக்கு அழுத்தம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மௌண்ட் ப்ளெசண்டில் உள்ள மத்திய மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் அடையாளம் காணப்பட்ட 19 வயது நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப் பட்டதாகவும் ஆயுதத்துடன் இன்னமும் இவர் கைதாகவில்லை என்றும் தெரிய வருகின்றது. இதனால் குறித்த மாநிலத்திலுள்ள பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு போலிசார் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
மிச்சிகன் பல்கலைக் கழக துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி : டிரம்பின் புதிய திட்டத்துக்கு சவால் விடுக்கும் தொடர் சம்பவங்கள்
Saturday, March 3, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment