‘மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும் நேர்படப் பேசுதல் நிறுத்த மாட்டேன்’ என நடிகை கஸ்தூரி கவிதை எழுதியுள்ளார்.
தன் மனதில் பட்டதை தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடிய நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். சில காலமாக ட்விட்டரில் தான் நினைத்த கருத்துகளை அவர் வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார். அதற்கான எதிர்வினைகள் அவரைத் தாக்கினாலும், மனம் தளராது தன்னுடைய கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார்.
இந்நிலையில், ‘மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும் நேர்படப் பேசுதல் நிறுத்த மாட்டேன்’ என ஒரு கவிதையை(?) இன்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. அந்தக் கவிதை இதோ…
மிரட்டல் விடுத்தாலும்
சிறையில் அடைத்தாலும்
நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன்
துச்சம்மென நினைத்தெம்மை
அச்சுறுத்தல் செய்வோரை
போர் புரிந்தோட்டவும் தயங்கமாட்டேன்
மறந்துபோன வலிகளையே
மறுபடி மறுபடி விதைப்பவர்கள்
துரத்தி வந்தால் துடிக்கும் ஜாதியல்ல
துணித்து திரும்பி அடிக்கும் நீதியெமது!
கஸ்தூரியின் இந்தக் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tuesday, March 6, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment