ரஷ்யாவின் மேற்கு சைபீரியாவில் உள்ள கெமரோவோ என்ற பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகளவு சிறுவர்களும் அடங்குகின்றனர். பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பல மணி நேரமாகப் போராடியும் திங்கட்கிழமை வரை தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 660 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்தப் பாரிய தீ விபத்துக்கு மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதப் பட்ட போதும் முதலில் சிறுவர்களுக்கான ட்ராம்பொலின் அறையில் தான் தீ ஏற்பட்டதாகவும் இது சிகரெட் லைட்டரில் இருந்து ஆரம்பித்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப் படுகின்றது.
Monday, March 26, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment