அமெரிக்காவிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் பலர் தங்கள் நாட்டின் தூதர்கள் என்ற போர்வையில் அமெரிக்காவை வேவு பார்க்கின்றனர் என்ற குற்றச் சாட்டின் கீழ் கிட்டத்தட்ட 60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 23 ரஷ்யத் தூதர்களை பிரிட்டனும் அண்மையில் தான் திருப்பி அனுப்பியிருந்தது.
முன்னால் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்க்ரிப்பால் மற்றும் அவரின் மகள் ஆகியோரை விஷத் தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காகவே பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இந்த முடிவை எடுத்திருந்தார். இந்நிலையில் முன்னைய அதிபர்களை விட ரஷ்யாவுடன் தொடர்ந்து ஸ்திரமான நல்லுறவைப் பேணி வந்த டிரம்ப் ரஷ்ய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் அதிரடியான முடிவாக ரஷ்யத் தூதரகளை வெளியேற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் 100 இற்கும் சற்று அதிகமான ரஷ்ய புலனாய்வு அதிகார்கள் உள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ள நிலையில் 60 பேர் வெளியேற்றப் பட்ட பின் வெறும் 40 பேர் தான் அமெரிக்காவில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, March 26, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment