மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டதாக மத்திய அரசு தெவித்துள்ளது. பண மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிவிட்டார். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12,000 கோடி அளவுக்கு முறைகேடு செய்த வைர வியாபாரி நீரவ் மோடி தற்போது தலைமறைவாகி விட்டார். அவரது மனைவி ஆமி, உறவினர் மெகல் சோக்சி ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர்.
Friday, March 16, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment