அண்மையில் முன்னால் பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னால் உளவு அதிகாரியும் அவரது மகளும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நஞ்சால் தாக்கப் பட்டிருந்தனர். இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகக் குற்றம் சாட்டி அந்நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேறுமாறு பிரிட்டன் உத்தரவிட்டிருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாஸ்கோவின் பிரிட்டன் தூதரகத்தில் உள்ள சில முக்கிய 23 அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப் படுவர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர இரு நாட்டுக்கும் இடையே கலாச்சார உறவைப் பேணும் விதத்தில் ரஷ்யாவில் இயங்கி வந்த பிரிட்டன் கவுன்சிலை மூடப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளதால் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவில் பாரிய விரிசல் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரு நாட்டுக்கும் இடையே விரிசல் ஏற்படும் விதத்தில் மார்ச் 4 ஆம் திகதி இடம்பெற்ற நச்சுத் தாக்குதல் சம்பவத்துக்கு தன் மீது பிரிட்டன் சுமத்தும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இந்த நச்சுத் தாக்குதல் சம்பவத்துக்கு உள்ளான முன்னால் ரஷ்ய உளவாளியும் அவரது மகளும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக இந்தக் கொலை முயற்சி தொடர்பில் ரஷ்யாவைக் குற்றம் சாட்டியிருந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் பேசும் போது ரஷ்யாவின் இந்த கொலை முயற்சிக்கு எதிராக அந்நாட்டுடன் மேற்கொள்ளப் பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப் படுவதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக ரஷ்யா தங்கள் மீது சுமத்தப் படும் எந்தவொரு குற்ற நடவடிக்கைக்கும் பிரிட்டன் எதிர் வினையை நிச்சயம் சந்திக்கும் என்று எச்சரித்திருந்ததும் முக்கியமானது ஆகும்.
Home
»
World News
»
பிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா : ரஷ்ய பிரிட்டன் உறவில் விரிசல்
Saturday, March 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment