இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டை 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் இந்த போரின் போது காணாமல் போயினர். அவர்களின் நிலை தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், காணமல் போனவர்களின் நிலையை அறிய தனிக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சலியா பெரிஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அதிபர் மைத்திரிபால சிறீசேனா இன்று அமைத்துள்ளார். இந்த குழுவில் 2 தமிழர்கள், 1 முஸ்லிம் நபர் இடம்பெற்றுள்ளார்.
சுதந்திர அமைப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், போரில் தொலைந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், அவர்களின் நிலை குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்த குழுவுக்காக 13 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
Sri Lanka
»
இலங்கை உள்நாட்டு போரில் காணமல் போனவர்களின் நிலை அறிய, 2 தமிழர்கள் உட்பட்ட தனிக்குழு
Saturday, March 3, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment