Sunday, March 18, 2018

சுமார் 12 வருட திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் மற்றும் அவரது துணைவியாரான வனெஸ்ஸா டிரம்ப் ஆகியோர் பிரிந்து வாழ்வதென முடிவெடுத்துள்ளனர். மேலும் இந்த விவாகரத்து முடிவு தொடர்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கி விட்டதாக வனெஸ்ஸா அறிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் ஜோடியாக இணைந்து வெளியிட்ட தகவலில் விவாகரத்து பெறப் போகின்ற போதிலும் இருவருக்கும் இடையேயான நட்பும் இரு குடும்பங்களுக்கும் இடையேயான மரியாதையும் தொடர்ந்தும் பேணப் படும் என அறிவித்துள்ளனர். முன்னால் மாடலான வனெஸ்ஸா டிரம்ப் தனது விவாகரத்துக்கான உண்மையான காரணத்தை இதுவரை ஊடகங்களுக்குத் தெரியப் படுத்தவில்லை. தற்போது 40 வயதாகும் இவரகள் இருவருக்கும் 5 குழந்தைகள் உள்ளனர். 2005 இல் திருமணம் செய்து கொண்ட இவர்களது முதலாவது பெண் குழந்தை 2007 ஆம் ஆண்டு பிறந்தாள். இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் அதிபராகுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே தாத்தா ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாம் பிரிகின்ற போதும் தமது 5 குழந்தைகளினதும் வாழ்க்கை தான் தமது முக்கிய கடமை என இருவருமே தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தனது கணவருக்கு வந்த அஞ்சல் ஒன்றைப் பிரித்துப் பார்த்த போது அதில் இருந்த மர்ம வெள்ளை நிறப் பொடியை முகர்ந்ததால் மயக்கமடைந்த வனெஸ்ஸா பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டே குணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் விவாகரத்து பெறவுள்ள போதிலும் டிரம்பின் குடும்ப சொத்துக்கள் மீதோ அல்லது குழந்தைகள் மீதோ உரிமை கோரப் போவதில்லை என வனெஸ்ஸா தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer