இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தினர். நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் அவசர நிலையும் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இலங்கை முழுவதும் பேஸ்புக், உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வசமிருந்த சட்டம் - ஒழுங்குத்துறை பறிக்கப்பட்டு பொது நிர்வாகத்துறை மந்திரியாக இருக்கும் ரஞ்சித் மத்துமா பந்த்ரா சட்டம் - ஒழுங்கு மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
11 நாட்களுக்கு முன்னர் மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்ட போது, ரணில் விக்கிரமசிங்கே வசம் தற்காலிகமாக சட்டம் - ஒழுங்குத்துறை ஒப்படைக்கப்பட்டது.
Home
»
Sri Lanka
»
பிரதமர் ரணில் வசமிருந்த சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சு 11 நாட்களில் பறிப்பு..
Thursday, March 8, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment