Sunday, February 11, 2018

நிக்கி கல்ராணியும் விக்ரம் பிரபுவும் இணைந்து நடித்திருக்கும் படம் பக்கா.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஜம்மென்று வந்துவிட்டார் நிக்கி.

வந்து சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பின்புதான் தெரிந்ததாம், படத்தின் ஹீரோவும் மற்றொரு ஹீரோயினுமான பிந்து மாதவியும் அல்வா கொடுத்துவிட்டார்கள் என்று.

நானும் கிளம்புறேன். நான் மட்டும் ஏமாளியா என்றெல்லாம் அடம் பிடித்துவிட்டார் தயாரிப்பாளரிடம்.

எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அவரை இருக்க வைத்தார்கள்.

ஆனால் பின்னணியில் நடந்த பஞ்சாயத்தை மேடையில் காட்டிக் கொள்ளாமல் ரசிகர்கள் மத்தியில் கலகலப்பு காட்டிவிட்டு கிளம்பினார் நிக்கி.

ஆஹா.. இதுவல்லவோ நடிப்பு?

0 comments :

Post a Comment

 
Toggle Footer