நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளம் நிலையில் தனது முதல் மாநாட்டை திருச்சியில் இருந்து தொடங்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த். தாம் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் கூறி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தினர். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் மண்டலங்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Thursday, February 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment