வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் உருவான '2.0' படம் ஏப்ரலில் வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிடுகிறார்கள்.
'காலா' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று வீடியோ முடிகிறது. மேலும் வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Monday, February 12, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment