Thursday, February 15, 2018

அந்த இனிய தருணத்தை வேறொருவர் சொல்லி அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் மிஷ்கின்.

அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் மிஷ்கின்தான்.

இப்படத்தின் பத்திரிகையாளர் ஷோ முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்று கைதட்ட... அப்படியே ஆடிப்போய்விட்டார் ஆதித்யா.

‘இந்த நாளுக்காகதான் கனவு கண்டோம். அப்படியே நடந்திருக்கு.

ஆனால் இதை நேரில் பார்க்க என் அண்ணன் மிஷ்கின் இங்க இல்லையேங்கறதுதான் வருத்தம்.

நிறைய கடன் வாங்கிதான் இந்தப்படத்தை எடுத்திருக்கோம்.

அந்த பஞ்சாயத்துகளில்தான் இருக்கிறார் அண்ணன்.

இங்க வர முடியல... என்று வருந்தினார்.

வருத்தம் சிரிப்பாக மாறியிருக்குமே இந்நேரம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer