இன்னும் எத்தனைபேர் அரசியலுக்கு வரப்போறீங்களோ, முதல்ல சொல்லிடுங்கப்பா என்கிற அளவுக்கு திகிலாகிக் கிடக்கிறது தமிழகம்.
சும்மாயில்லாமல் டி.ராஜேந்தரின் வாயையும் பிடுங்கிவிட்டது பிரஸ்.
சிம்புவின் ‘பர்த் டே’ வழக்கமாக கலகலப்பாகதான் முடியும்.
இந்த முறை கலகத்தில் முடிந்துவிட்டது.
பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி வரும்போது சிம்பு ஏர்போர்ட்டில் நிற்பது போல ஒரு ஸ்டில்லை எடுத்து ட்விட்டரில் தட்டிவிட்டார்கள் யாரோ.
அவ்வளவுதான்... அவர் வீட்டில் ரசிகர் கூட்டம் முற்றுகையிட்டுவிட்டது.
‘தம்பி ஊர்ல இல்ல’ என்று வீடு மறுத்தாலும் விடுவார்களா ரசிகர்கள்? ஒரே குய்யோ முய்யோ.
எப்படியோ டி.ஆர் மட்டும் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.
அப்போதுதான் பிரஸ் கேட்ட கேள்விக்கு, ‘சிம்பு அரசியலுக்கு வருவான்.
ரசிகர்களை திரட்டுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
கடுகு எண்ணையில போட்றதுக்கு முன்னாடியே டப்பாவோட குதிக்குமே?
Sunday, February 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment