ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி, வீரம் படத்தில் இவள் தானா, ஐ படத்தில் பூக்களே சற்று ஓய்வெடுங்கள், மிருதன் படத்தில் மிருதா மிருதா உள்ளிட்ட தமிழில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பவர் ஷ்ரேயா கோஷல்.
இவர் தனது நீண்டநாள் நண்பர் ஷில்லதித்யா முபோத்யா என்பவரை மணந்தார். திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் தனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக ஷ்ரேயா கோஷல் பகிர்ந்துகொண்டதில்லை.
இந்நிலையில் கணவர் முபோத்யாவுடன் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு தங்களுக்குள் மலர்ந்த காதல் பற்றி மனம் திறந்திருக்கிறார்.
‘நீ யாரோ, நான் யாரோ, வழிப்போக்கர்களாக பள்ளி விழா ஒன்றில் சந்தித்தோம். அந்த நொடியில் நமக்குள் ஒரு சரியான நிகழ்வு நடந்தது.
நமது இதயங்கள் வெறித்தனமாக இணைந்துவிட்டன. கதைகளிலும், சினிமாவிலும் நான் படித்த, பார்த்த காட்சிகள் என் வாழ்வில் நிஜமாகும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை.
ஆனால் எல்லாம் நல்லபடியாக நடந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஷ்ரேயா கோஷல்.
Sunday, February 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment