நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள வடக்கு குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவருடைய 2-வது மகன் வெங்கடேஷ் (வயது 26). பி.காம். பட்டதாரியான இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு நேற்று காலை வள்ளியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வெங்கடேசும் சில நாட்கள் விடுமுறை எடுத்து தனது திருமண அழைப்பிதழை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு கொடுத்துவந்தார். இருவருக்கும் ஒரே ஊர் என்பதால் திருமண நிகழ்ச்சி களைகட்டி இருந்தது.
திருமண மண்டபத்தில் விருந்து தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. முகூர்த்தம் காலை 9.30 மணிக்கு குறிக்கப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு மணப்பெண் மேளதாளங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வர இருந்த நிலையில், காலை 8.30 மணிக்கு வீட்டில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த வெங்கடேஷ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால், பதில் எதுவும் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
பதறிப்போன அனைவரும் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வள்ளியூர் திருமண மண்டபத்தில் கனவுகளுடன் காத்திருந்த மணப்பெண் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். அவரை உறவினர்கள் தேற்றியபடி இருந்தனர். திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் திருமண மண்டபம் களை இழந்தது. இதனால் அங்கு கூடியிருந்த பெண் வீட்டார் வெளியேறி சென்றனர்.
வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Home
»
Tamizhagam
»
தாலி கட்டுவார் என மண்டபத்தில் காத்திருந்த பெண்.. ஒரு மணி நேரத்துக்கு முன்பு, மணமகன் தற்கொலை..
Monday, February 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment