Monday, February 5, 2018

ஐயோ பாவம் அங்காடித்தெரு மகேஷ்! அவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவருக்கு அடுத்தடுத்து எப்படி ஸ்டெப் வைப்பது என்பதே தெரியாமல் போனதன் விளைவு... ஆள் இருந்தும் இல்லை என்கிற அளவுக்கு மோசம்! ‘ஏம்ப்பா... எண்ணம் முழுக்க நடிப்புல இருக்கணும்.

ஆனா நீ மூக்கு முட்ட மட்டன் பிரியாணியை தின்னுட்டு, ஒரு மணி நேரம் தூங்க வேற செய்ற? அதற்கப்புறம் வந்து கேமிரா முன்னாடி நின்றா மூஞ்சு மூஞ்சாவா இருக்கும்?’ என்று முகத்திற்கு நேராகவே கேட்டு விட்டார் ஒரு இயக்குனர். அப்படியும் மகேஷின் குணம் மாறவில்லை.

மழை நின்ற பிறகு நனைய ஆசைப்பட்டவர் போல, படு சுறுசுறுப்பாக வந்திருக்கிறாராம் இப்போது. கண்ணுக்கு தெரிகிற வரைக்கும் நல்ல இயக்குனர்களோ, நல்ல நிறுவனங்களோ அவரை சீண்டக்கூட இல்லை. வேரோட இருக்கிற வரைக்கும்தான் வெங்காயத்துக்கு உயிர்! புர்ர்ர்ர்....யுதா புரோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer