Wednesday, February 14, 2018

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்குவேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க. தலைமையிலான கட்சிகள் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வைகோ பேசியதாவது: “14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer