Wednesday, February 28, 2018

தமிழகத்தின் இரண்டு பெண் திரை நட்சத்திரங்களின் மரணம் மர்மமானது எப்படி..?

தமிழக அரசியலில் ஸ்ரீ தேவியின் காலத்து நாயகர்கள் இருவர் வரவுள்ளனர், கமல் வந்துவிட்டார், அடுத்து ரஜினியும் வரப்போகிறார்.

தேர்தல் நெருங்க கமலும், ரஜினியும் இணைவார்கள் என்கிறார்கள்..

அந்த நேரம் ஸ்ரீதேவியும் அவர்களுடன் சேர்ந்தால் தமிழக அரசியலில் வெற்றி அவர்கள் பக்கமே வீசும், ஏனென்றால் ஒரு தமிழக நடிகை அரசியலில் இருப்பது சீமான் போன்றவர்களின் கருத்தை உடைக்க உதவியாக அமைந்துவிடும்.

“கன்னட ரஜினி, மலையாள கமல் என்று பேசாதே தமிழக ஸ்ரீதேவியும் நம்மோடுதான் ஜெயலலிதாவின் இடத்திற்கு அவரை கொண்டு வருகிறோம் மூடு வாயை ” என்று சொல்ல ரஜினிக்கு சரியான துரும்புச் சீட்டாக இருந்தவர் ஸ்ரீதேவி ஒருவரே..

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இன்னொரு ஆணால் நிரப்ப முடியாது அது ஸ்ரீ தேவி போன்ற ஒரு நடிகையால் மட்டுமே முடியும்.

மேலும் ஜெயலலிதாவின் வெற்றிடத்திற்கு பொருத்தமாக அவருடன் நடித்த, அவரை விட பிரபலமான நடிகையாக கடைசியாக எஞ்சியிருந்தது ஸ்ரீ தேவி மட்டுமே..

அதுவும் எஞ்சியிருந்த தமிழகத்தை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகையும் அவர்தான், அவர் அரசியலுக்கு வந்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறதே..?

எப்படி எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தாரோ அப்படியே ஸ்ரீதேவி கமல் ரஜினி இருவருடனும் நடித்துள்ளார்.

அவர் மட்டும் கமல் ரஜினியுடன் அரசியல் மேடையில் ஒன்றாக பயணம் செய்வாராக இருந்தால் அதைவிட பெரிய வெற்றி வேறெதுவும் இருக்க முடியாது.

எத்தனையோ நடிகைகள் எல்லாம் கமல், ரஜினிக்கு ஆதரவு கொடுத்தாலும் ஸ்ரீ தேவிக்குள்ள சிறப்பு அவர்களில் யாருக்குமே கிடையாது.

அப்படிப் பார்த்தால் இந்த மரணம் கமல், ரஜினி இருவருக்குமே பேரிழப்புத்தான்..!!

வந்து கொண்டிருந்த அரிய வாய்ப்பை ஸ்ரீதேவி இழந்துவிட்டார் என்பதுதான் அவருடைய இறப்பில் உள்ள பெரும் துயரமாகும்.

கமல், ரஜினி இருவரும் அவரை பாவிக்காவிட்டால் ஜெயலலிதாவின் இடத்திற்காக அதிமுக அவரைப் பாவித்திருக்க இடமிருக்கிறது.

இப்படி சினிமாவுக்கு பிந்திய அரசியலில் பல ஸ்ரீதேவிக்கு வாய்ப்பாக இருந்தன, மரணம் அனைத்தையும் காவு கொண்டுவிட்டது.

நாம் இப்படி சிந்திக்கக் காரணம் என்ன..?

ஸ்ரீ தேவியின் மரணமே இப்போது சந்தேகமாகியிருப்பதால்தான் இப்படி சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் அசைக்க முடியாத பெண்ணாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தின் சந்தேகம் போல இவருடைய மரணமும் அரசியல் சந்தேகத்திற்கு நமமை அழைத்துச் செல்கிறது.

ஏனென்றால் அவர் மாரடைப்பால் இறந்திருந்தார் என்ற செய்தி உண்மையானால் கண்டிப்பாக அவரை அரசியலோடு சம்மந்தப்படுத்தி நாம் சிந்தித்திருக்க வேண்டிய தேவையே உருவாகியிருக்காது.

ஆனால் மாரடைப்பு இல்லை அவர் நீரில் மூழ்கி மடிந்துள்ளார் பிந்தைய தகவல்..

அவருடைய தலையில் பலத்த காயமிருக்கிறது இது இன்னொரு தகவல்..

அவர் மது அருந்தியிருந்தார் இது மூன்றாவது தகவல்..

இதுபோல ஏற்கெனவே இந்திய பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவியின் மரணமும் நடந்திருக்கிறது, அது குறித்தும் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

துபாய் போலீஸ் ஸ்ரீ தேவி கணவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை, அந்த இடத்திற்கு போன இந்திய தூதரக அதிகாரிகளை துபாய் போலீஸ் திருப்பி அனுப்பியது என்று செய்திகள் கூறுகின்றன.

அவருடைய மரணம் குறித்த முரண்பட்ட தகவல்கள் ஜெயலலிதா மரணம் போலவே குழப்பமாக இருக்கிறதே..?

இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து..

நடிகை ஸ்ரீ தேவி உடல் அழகில் ஆர்வம் கொண்டவர், ஆகவே அவர் மதுபானம் அருந்திவிட்டு விழுந்து மடிந்திருக்க மாட்டார் என்கிறார்.

அவருடைய மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் போன்றவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஜெயலலிதாவையும் ஊழல் வழக்கில் சிக்க வைத்தவர் அவர்தான், எனவே அவருடைய கருத்தை முற்றாகவே புறந்தள்ள முடியாது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மடியில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீ தேவியின் மரணமும் இப்போது சந்தேகமாகியிருக்கிறதால் தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்திற்கும் இவைகளுக்கும் ஏதாவது லிங் இருக்குமா என்பது ஒரு சந்தேகம்.

தமிழக அரசியலில் கடைசி நேர துருப்புச் சீட்டாக ஸ்ரீ தேவி வர இருந்தாரா என்ற சந்தேகத்தை சுப்பிரமணிய சுவாமியின் கருத்து ஏற்படுத்துகிறது.

ஆனால் இதுபற்றி ஊர்ஜிதமான எந்த செய்திகளும் வெளியாகவில்லை..

இப்போது ரஜினி, கமல் இருவரும் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க மும்பை போயுள்ளார்கள்..

சிறீதேவிக்கு இனி நடிப்பில் வாய்ப்புகள் இல்லை..

அவருக்கு பொருளாதார பிரச்சனை இருந்ததாக செய்திகள் இல்லை ஆனால் அவருடைய கணவர் போணி கபூர் மூன்னர் ஒரு தடவை நடிகர் தனுஸ்சிற்கு வழங்கிய ஓர் இலட்சம் ரூபா அட்வாண்சை பகிரங்கமாக கேட்டது நினைவிருக்கிறது.

அது போல சமீபத்தில் நடித்த தமிழ் படமொன்றில் பேசிய சம்பளத்தை தரவில்லை என்று ஸ்ரீதேவி பிரச்சனை எடுத்ததும் தெரிந்ததே..

ஆக அவர்களுக்கு பொருளாதார பிரச்சனை இருந்திருக்க வேண்டும், அதற்கு அரசியல் வடிகாலாக இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு..

ஆனால்… எங்கோ தவறியிருக்கிறது..

இது ஆபத்தான கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகள் கொண்ட உலகம் இங்கு எதுவும் நடக்கலாம்..

இது ஓர் ஆய்வுப் பார்வைதான், காலம்தான் இத்தகைய சந்தேகங்களுக்கு விடை தரவேண்டும்..

மேலும் தமிழக அரசியலுக்கு ஸ்ரீ தேவி வரவேண்டிய தருணம் இதுவென்பதை யாரும் மறுக்க முடியாது.

அவர் இறந்துவிட்டார் அந்த இறப்பு சந்தேகமென்றால்.. மற்றைய இடங்களுக்கு வெளிச்சம் பாய்ச்ச வேண்டியது சிந்திக்கும் உரிமையாகும்.

இது உண்மையில்லை..

ஒரு வேளை நாளை உண்மையானால் மறுப்பதற்கும் இல்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer