பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Thursday, February 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment