பிரபல நடிகை ஸ்ரீதேவி (55) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.
1967இல் ‘கந்தன் கருணை’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தமிழில் வெளியான ‘துணைவன்’ என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடித்தவர் ஆவர். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை மணந்த ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
Saturday, February 24, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment