சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.
இதனையடுத்து, புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. இல்லையென்றால், கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு அழுத்தம் விடுக்கப்படுகின்றது.
இந்த நிலைமையைச் சமாளித்துக் கொள்வதற்காகவே கரு ஜயசூரியவை புதிய பிரதமராக்கும் வேண்டுகோளுக்கு ரணில் விக்ரமசிங்க பணிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tuesday, February 13, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment