Sunday, February 4, 2018

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 'வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இந்திய அணி, 32.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து விக்கெட்டுகளையும் சுருட்டியது. இந்திய அணியின் சார்பாக, சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

119 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்த நிலையில் நான்காவது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் மோர்னேவிடம் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டை இழந்தார்.

தவான் 51 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து இருந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer