Saturday, February 10, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு பூராவும் இன்று சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்துள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 04.00 மணி வரை வாக்களிப்பு தொடரும். மாலை 05.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்து, இன்று இரவு 09.00 மணிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான பிரதிநிதிகள் யார் என்பது தெரியவரும்.

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறும் இந்தத் தேர்தலில், 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 43 அரசியல் கட்சிகளும் 222 சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபையில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில் அச் சபைக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 340 சபைகளுக்கே தேர்தல் நடத்தப்படுகிறது. இதனடிப்படையில் 13 ஆயிரத்து 374 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் ஆணைக்குழுஇ பெப்ரல் மற்றும் கபே ஆகிய கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் முதன்முதலாக நடத்தப்படவிருக்கும் கலப்பு முறைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்காக நான்கு நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இதில் தென் கொரியாஇ இந்தோனேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து இருவர் வீதமும் இந்தியாவிலிருந்து நால்வரும் அடங்குவர்.

இறுதியாக 2011ஆம் ஆண்டே உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதேர்தல் சட்டத் திருத்தத்தின்படி கலப்பு முறையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் உள்ளூராட்சித் தேர்தல் கால தாமதமானதோடு புதிய கலப்பு முறையில் வட்டார முறையின் கீழ் 60 வீதமான உறுப்பினர்களும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் இம்முறை தெரிவாகின்றனர்.

இதனையடுத்துஇ நாடு முழுவதும் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4இ000 அதிரடிப் படையினர் உட்பட 65இ000 பொலிஸாருடன் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைவரையும் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

வாக்காளர்கள் வாக்குச்சீட்டின் குறிப்பிடப்பட்டுள்ள தாம் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே ஒரேயொரு புள்ளடியை மட்டுமே இடவேண்டுமென்றும் இல்லையேல் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் வாக்களித்தவுடன் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்துக்குள் கூட்டமாக கூடி நிற்காமல் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு உடன் திரும்ப வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் முதலாவது உள்ளூராட்சி சபைக்கான பெறுபேறு இன்று இரவு 10 மணிக்கு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் கூறினார்.

இதேவேளைஇ இன்று நடைபெறும் தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடத்துவதற்காக 4 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65 ஆயிரம் பொலிஸார் நாடு முழுவதும் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் பொலிஸ்அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் அமைதியை குலைக்கும் வகையில் எவரேனும் குழப்பம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக ஆகக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இம்முறை தேர்தல் பணிகளில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் கடமை புரியவுள்ளனர். தேர்தல் சட்ட விதிகளுக்கமைய வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் முகவர்கள்இ உள்நாட்டு கண்காணிப்பாளர்கள்இ தேர்தல் அதிகாரிகள்இ பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்இ வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களைத் தவிர்ந்த ஏனையோருக்கு உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய அடையாள அட்டைஇசெல்லுபடியாகும் கடவுச்சீட்டுஇ சாரதி அனுமதிப்பத்திரம்இஓய்வூதிய அட்டைஇமுதியோர் அடையாள அட்டைஇஆட்பதிவுத் திணைக்களத்தால் மதகுருமார்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவிர்ந்த வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டர். எவ்வித அடையாள அட்டையும் இல்லாதவர்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட விசேட அடையாள அட்டையை உடன் எடுத்து வரமுடியுமென்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டை உடன் இருப்பின் வாக்களிக்கும்போது வாக்காளரின் பெயரை கண்டுபிடிப்பது இலகுவாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தபால்மூல வாக்குகள் 50 இற்கு மேற்பட்டதாக காணப்பட்டால் அவை பிறிதொரு நிலையத்திலும் அதன் எண்ணிக்கை 50 இற்கு குறைவாக இருந்தால் ஏனைய சாதாரண வாக்குகளுடன் இணைத்துக் கணக்கிடப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுக்கமைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டு பின்னர் இறுதியாக அனைத்தும் சேர்த்து தொகுதியடிப்படையில் பெறுபேறுகள் வெளியிடப்படும்.

பின்னர் தொகுதியடிப்படையிலான பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து இரவு 10 மணியளவில் உள்ளூராட்சி சபை முடிவுகளை அறிவிப்பர் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.நாடு முழுவதுமுள்ள 42 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள 65 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளும் நேற்று காலை 7 மணி முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் 11 ஆம் திகதி மாலை வரை தொடர்ந்தும் கடமையில் இருப்பரென்றும் அதனைத் தொடர்ந்தும் அவர்களது கடமை நீடிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபரே தீர்மானிப்பாரென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

தேர்தலை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தால் மூவாயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்ெகடுப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதுவரை நாட்டில் அமைதியை பேண உதவியமைக்காக வேட்பாளர்களுக்கு விசேட நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது எவ்வித தேர்தல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட முடியாது.வேட்பாளரின் வாகனத்தில் ஒரு கொடியை மட்டுமே பறக்க விடமுடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வாக்கெடுப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் கூடியிருக்கும் மக்கள் பொலிஸாரால் கலைக்கப்படுவர். குழப்பநிலையை தோற்றுவிப்போர் உடனடியாக கைது செய்யப்படுவதுடன். மதுபோதையுடன் எவரேனும் வாக்கெடுப்பு நிலையத்திற்குள்ளோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியிலோ கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer