நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 22-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். ஆறு கைகள் இணைந்த சின்னம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மய்யம் .காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி இருந்தார். கட்சியில் சேர விரும்புபவர்கள் தங்களை மய்யம்.காம் இணையதளம் மூலம் இணைத்துக் கொள்ளும்படி கமல் அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களும் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே மய்யம்.காம் இணையதளம் மூலம் 2,01,597 பேர் உறுப்பினராக சேருவதற்கு பதிவு செய்திருப்பதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அவர்களுக்கு உறுப்பினருக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Wednesday, February 28, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment