Sunday, February 25, 2018

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளா வீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள்.

கடகம்: ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம்உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற் றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள் வீர்கள்.பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சில நேரங்களில் வெறுப் பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

தனுசு: உங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகமுடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகள் பொறுப் பாக நடந்துக் கொள்வார்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப் பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer