Sunday, February 18, 2018

மேஷம்: குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரி யங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள் வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண் பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங் களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி குடும் பத்தில் சந்தோஷம் நிலைக் கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கன்னி: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவி னர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.குடும்பத்தில் சலசலப்புகள் வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer