அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பார்க்லேண்ட் என்ற நகரிலுள்ள பள்ளி ஒன்றில் 19 வயதுடைய முன்னால் மாணவர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பரிதாபமாகப் பலியாகி உள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் அடுத்த இரத்தக் கறை படிந்த சம்பவமாக பதியப் பட்டுள்ள இந்த அசம்பாவிதத்தின் போது இந்திய வம்சவாளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட 12 இற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட முன்னால் மாணவர் நிகோலஸ் குரூஸ் என அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இவரைப் போலிசார் கைது செய்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் FBI புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை மாஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் என்ற குறித்த உயர்நிலைப் பள்ளியில் பள்ளி முடிவடைந்தது என மாணவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை மணியை முதல் நிகோலஸ் குரூஸ் ஒலிக்கச் செய்துள்ளான். ஆனாலும் அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த காரணத்தினால் குறித்த பள்ளி மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை அளிக்கப் பட்டிருந்தது. இதனால் அதிகளவு மாணவர்கள் வெளியே வரவில்லை. இதனால் அதிக உயிரிழப்புக்கள் தவிர்க்கப் பட்டாலும் பள்ளிக்கு உள்ளே புகுந்து நிக்கோலஸ் குரூஸ் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியாகியும் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மருத்துவ மனையில் கவலைக்கிடமாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப் பட்ட நிக்கோலஸ் குரூஸிடம் ஏ ஆர் 15 ரக துப்பாக்கியுடன் அவனது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் கிடைக்கப் பெற்றதால் இவருக்குத் தீவிரவாதத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது. எனினும் இவர் மனநலம் பாதித்தவர் எனவும் துப்பாக்கிகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. முன்னதாக பள்ளி நிர்வாகம் இவருக்கு ஒழுங்கு நடவடிக்கை சரியில்லை என்ற காரணம் கருதி பள்ளியில் இருந்து நீக்கியிருந்ததும் முக்கியமானது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு வரையிலான கணிப்பின் படி பார்க்லேண்ட் நகரம் புளோரிடாவில் மட்டுமல்லாது நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் என்று தரப் படுத்தப் பட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக உரிமம் பெற்றுத் துப்பாக்கியை வைத்துக் கொள்ள அனுமதி உள்ள நாடான அமெரிக்காவில் இது போன்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகளவு நிகழ்ந்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இதுவரை 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மிக மோசமானது நேற்றைய பள்ளித் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் கறை! : துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
Thursday, February 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment