Tuesday, February 13, 2018

மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துபோகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கடகம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

கன்னி: குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர். பிரார்த்தனைகளை குடும்பத் தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.

தனுசு: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்: கொஞ்சம் நிதானித்து செயல்படப்பாருங்கள். எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer