முப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் 7 இலட்சத்து 40 ஆயிரம் துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே, ஆயுதங்களை வாங்குவதற்கான மேற்கண்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.1,819 கோடியில் இலகு ரக எந்திர துப்பாக்கிகள் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இராணுவத்துக்காக ரூ.982 கோடி மதிப்பில் 5,719 ‘ஸ்னீபர்’ ரக துப்பாக்கிகள் வாங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Wednesday, February 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment