புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர வேண்டுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எம்.ஏ.சுமந்திரன், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை உருவாக்கின. இதன் மூலமாகத்தான் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகவிருந்தது. எனவே எது நடந்தாலும் கூட்டு அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும். விசேடமாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாக இருந்தால் கூட்டு அரசாங்கம் நிலைக்க வேண்டும்.
கூட்டு அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் சேர்ந்து பயணிப்பதற்கு எங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றோம். நாம் அவ்வாறு சொல்லுவதன் காரணமாக ஊழலை மறைத்து செயற்படுமாறு நாம் கூறவில்லை. ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில், இவ்வாறான விடயங்களால் கூட்டு அரசாங்கத்தின் காலம் குறைந்துவிடக்கூடாது அல்லது முறிந்துவிடுவதை விரும்பவில்லை.” என்றுள்ளார்.
Home
»
Tamizhagam
»
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம்: எம்.ஏ.சுமந்திரன்
Tuesday, January 16, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment