தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது, நேற்று திங்கட்கிழமை மாலை வயோதிபர் ஒருவரினால் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவு பணிப்பாளராக கடமையாற்றும் வேலாயுதம் தயாநிதியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் சென்ற குறித்த வயோதிபர், தாக்குதல் நடத்தியுள்ளார். ஆனாலும், அந்த நபரை, அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
சிறு காயங்களுக்கு உள்ளான வேலாயுதம் தயாநிதி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுத் திருப்பியுள்ளார்.
Tuesday, January 9, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment