உசுப்பி உசுப்பியே ரணகளமாக்குவது என்பார்களே... அதை கண்கூடாக காண வேண்டும் என்றால் சந்தானத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியும்.
தினந்தோறும் 25 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு காமெடி வேடங்களில் நடித்து வந்தவர், அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்ததுதான் தப்பு.
இவரது ஹீரோ அவதாரம் எடுத்த இரண்டு படங்கள் வளர்ந்தும் வளராமல் கிடக்கின்றன. ரிலீசுக்கு வந்த சக்கப்போடு போடு ராஜாவுக்கு சுமார் 300 தியேட்டர்கள் கிடைப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது அவருக்கு.
இதே படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துடன் போட்டியிடாமல் அடுத்த வாரம் வந்திருந்தால், இன்னும் நிறைய தியேட்டர்கள் கிடைத்திருக்கும்.
சுற்றியிருப்பவர்கள் உசுப்பிவிட்டதால் எடுத்த முடிவு. இதை அவர் உணர்வதற்குள் பாதி மண்டையில் கேசம் காலி! மன உளைச்சல் எக்ஸ்ட்ரா பிட்டிங்....
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment