சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட அமலாக்கத் துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்க துறையினர் சோதனை நடத்துவதற்காக சென்றனர். இதுபற்றி ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் இங்கே வசிக்கிறார் என நினைத்து, அமலாக்க துறையினர் என் வீட்டில் சோதனையிட்டனர், பின்னர் மன்னிப்பு கேட்டு திரும்பி சென்றார்கள். சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த வேறு சில தொடர்பில்லாத ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.” என்றுள்ளார்.
Sunday, January 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment