கனடாவில் 17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்னும் சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், பொலிசாரால் மீட்க்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை அறிவித்தது. என்னும் பள்ளியில் பயிலும் 16 வயது மாணவனுடன் வாய் தர்கத்தில் நிவேதன் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். குறித்த 16 வயது சிறுவன் கத்தியால், நிவேதனின் கீழ் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். ரத்தப் பெருக்கு காரணமாகவே அவர் இறந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
நிவேதன் மிகவும் குதூகலமான இளைஞர் எனவும். அவர் எல்லோருடனும் அன்புடன் பழகி வந்ததாக , அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபோன்றே பலரும் தமது கருத்தை வெளியிட்டுள்ள நிலையில். சிறு பிரச்சனை ஒன்றுக்காக கத்தி எடுத்து நிவேதனை ஈவு இரக்கம் இன்றி குத்தியுள்ளார் சக மாணவர் என்பது தெளிவாகியுள்ளது. குற்றம் புரிந்த 16 வயது மாணவனை பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தி. அவரை தொடர்ந்தும் காவலில் வைத்திருக்க நீதிபதியின் உத்தரவை நாடியுள்ளார்கள்.
குற்றம் புரிந்த மாணவன், ஆபிரிக்கர் என்று அறியப்படுகிறது , இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை. தமிழ் மாணவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக வாழவேண்டிய சூழல் உள்ளது. ஏன் எனில் தம்ழி பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு படிப்பையும் அன்பையும் சொல்லிக் கொடுத்து வளர்கிறார்கள். ஆனால் இந்த உலகம் அப்படி அல்ல. மிகவும் வன்முறையான உலகமாக உள்ளது. தற்காப்பு கலை, சுதாரிக்கும் தன்மை, பல்லின மக்கள் தொடர்பான அறிவு என்பன தமிழ் இளைஞர்களிடையே இருக்க வேண்டும். இல்லையென்றால் , வேற்றின மக்களிடம் நாம் சிக்கி தவிக்கவேண்டிய நிலை தோன்றும். இன் நிலையில் நிவேதன் அவர்களின் ஆத்ம சாந்திக்கு அதிர்வு இணையம் பிரார்த்திப்பதோடு, அவரின் குடும்பத்திற்கு அமைதி கிடைக்கவும் பிரார்த்திக்கிறோம்.
Wednesday, January 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment