காலம் சென்ற முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனுவில் மெரினாவில் அமைந்துள்ள எம் ஜீ ஆர் சமாதிக்கு உள்ளே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்றும் ஏற்கனவே அங்குள்ள முன்னால் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம் ஜீ ஆர் இன் சமாதிகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்திருந்தார்.
இதற்குக் காரணமாக கடற்கரையோர கட்டுமான விதிகளின் படி கடலில் இருந்து 500 மீட்டருக்குள் இவ்வாறு சமாதிகள் அமைக்கக் கூடாது என அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கு எதிராக இன்று திங்கட்கிழமை தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் 1991 இல் கடற்கரையோர கட்டுமானச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே எம் ஜீ ஆர் மற்றும் அண்ணாதுரை ஆகியோரின் சமாதிகள் நிறுவப் பட்டதால் இவற்றை அகற்றத் தேவையில்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு இன்று திங்கள் மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றது. மேலும் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூபாய் 50 கோடி நிதி செலவில் நினைவிடம் அமைக்கப் படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
Tamizhagam
»
மெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்ட மீறல் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Monday, January 29, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment