அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு நேற்று காலை புறப்பட்டு சென்ற அரசு பஸ்சை எஸ்.எஸ்.சிவக்குமார்(வயது 40) என்ற டிரைவர் ஹெல்மெட் அணிந்தபடி ஓட்டிச்சென்றார். இதை பஸ்சில் இருந்த பயணிகளும், மற்றவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் அவரை செல்போனில் படம் எடுத்தனர்.
இதுகுறித்து டிரைவர் சிவக்குமார் கூறும்போது, “நான் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்னை தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டினேன்” என்றார். இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர்.
Sunday, January 7, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment