அமெரிக்காவுக்கான ஐ.நா விசேட தூதரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹலே அதிபர் டிரம்புடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஈர்ப்பு இருப்பதாகவும் பரவியுள்ள வதந்திகளுக்கு ஊடகங்களில் தனது கடும் மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு அதியுயர் பதவி வழங்கப் பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணியான நிக்கி ஹலே தன் மீது அவதூறு விளைவிப்பதற்காகப் பரவியுள்ள இந்த வதந்திகள் உண்மையற்றவை என்றும் கேவலமானவை என்றும் பொலிட்டிக்கோ என்ற பத்திரிகை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை அமெரிக்க வான் படைக்காகப் பணியாற்றிய அலுவலகத்தில் தான் அதிகளவு பேருடன் பேசிப் பழக நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அது தவிர்த்துத் தான் தனது வருங்கால அரசியலுக்காகவோ தனிப்பட்ட வாழ்க்கைக்காகவோ தனிமையில் ஒருபோதும் டிரம்புடன் பேசியதோ நேரம் செலவிட்டதோ இல்லை என்றும் நிக்கி ஹலே குறிப்பிட்டார். அண்மையில் நியூயோர்க்கைச் சேர்ந்த மைக்கேல் வூல்ஃப் எழுதிய ஃபைர் அண்ட் தி ஃபுயீரி என்ற அதிபர் டிரம்பின் பலவீனங்களைத் தோலுரித்துக் காட்டிய புத்தகம் விற்பனையாகி சந்தையில் சூடு பிடித்திருந்தது. இந்த புத்தகத்திலும் தன்னைப் பற்றி அவதூறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் தன்னைப் பற்றி கூறியுள்ள குற்றச் சாட்டுக்கள் போலியானவை என்றும் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார்.
Home
»
»Unlabelled
»
அதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்! : ஊடகங்களுக்கு நிக்கி ஹலே காட்டம்
Saturday, January 27, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment