விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 35), விவசாயி. இவரது மனைவி சந்திரலேகா(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரியில் சக்திவேல் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சக்திவேலின் தாய் அலமேலு கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
இதையொட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சக்திவேலை அவரது மனைவியே, தனது கள்ளக்காதலன் மதிவாணனுடன்(32) சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், அதற்கு சக்திவேலின் மாமியார் அஞ்சலை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சந்திரலேகா, அஞ்சலை, கள்ளக்காதலன் மதிவாணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சக்திவேலை கொன்றது ஏன் என்று போலீசாரிடம் சந்திரலேகா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது தாய் அஞ்சலை இவரை பார்ப்பதற்காக, க.மாமாந்தூரை சேர்ந்த மதிவாணன் அடிக்கடி வீட்டுக்கு வந்தார். அப்போது எனக்கும் மதிவாணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த என் கணவர் சக்திவேல், என்னை கண்டித்தார். இதனால் எனக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் நான் ஆத்திரம் அடைந்தேன். எனது தாய் அஞ்சலை மற்றும் கள்ளக்காதலன் மதிவாணனுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சக்திவேல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மதிவாணனை வீட்டுக்கு வரவழைத்தேன். தூங்கிக் கொண்டிருந்த சக்திவேலின் கழுத்தை நாங்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கினோம். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து சக்திவேலின் உடலை என்ன செய்யலாம் என்று நினைத்தோம். பின்னர் உடலை தூக்கி சென்று அருகில் உள்ள ஏரியில் வீசினோம். தண்ணீரில் மூழ்கி அவர் இறந்ததாக நாடகமாடினோம். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Wednesday, January 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment