முல்லைத்தீவு கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவை எவை, விடுவிக்கப்படாதவை எவை என்கிற விபரங்களை வடக்கு மாகாண சபை சேகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கேப்பாப்புலவு சென்ற குழுவினரே இந்த விபரங்களைச் சேகரித்துள்ளனர்.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் நிலை என்ன, அந்தக் காணிகளில் இருந்த கட்டடங்களின் நிலை என்ன, என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
Thursday, January 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment