சமீபத்தில் தமிழ் மீடியாக்களில் மட்டுமல்ல, சிங்கள மீடியாக்களிலும் அடிபட்ட செய்தி. தயா மாஸ்டரை யாரோ கத்தியால் குத்த வந்தார்கள் என்பது தான். புலிகளின் மொழிபெயர்பாளராக இருந்து. இறுதியில் புலிகளை காட்டிக் கொடுத்துவிட்டு தப்பியோடி சிங்களத்தோடு கைகோர்த்த தயா மாஸ்டர். தற்போது டான் TV இன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சம்பவ தினமன்று, அவர் டான் TV அலுவலகத்தினுள் நுளைந்த போது. அங்கே நின்றிருந்த மன நிலை சரியில்லாத ஒருவரின் காலில் மிதித்து விட்டார்.
இதனால் கடுப்பான அன் நபர் தயா மாஸ்டரின் கன்னத்தில் அறையவே, அருகில் நின்ற ஊழியர்கள் அவரைப் பிடித்து மடக்கி அறை ஒன்றில் பூட்டி. பின்னர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்கள். வெறுமனவே நடந்த சம்பவத்தை சொன்னால், பொலிசார் அன் நபரை கைதுசெய்ய மாட்டார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இதனால் தயா மாஸ்டரை கத்தியால் குத்த வந்ததாக கூறி. கன்டீனில் உள்ள கத்தி ஒன்றையும் அங்கே போட்டுள்ளார்கள். ஆனால் அவரை விசாரித்த நீதிபதி, அவர் மன நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதனை உடனே புரிந்து கொண்டுள்ளார்.
காரணம் என்னவென்றால், தனது மண்டையில் டான் TV ஆட்கள் இரும்பு துண்டு ஒன்றை பொருத்தியுள்ளதாகவும். என்னிடம் கைபேசி இல்லை, ஆனால் மூக்கினுள் உள்ள மெமரி காட் ஊடாக தான் பேசுவதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் மன நிலை சரியில்லாத நபர் ஒருவரை இவ்வாறு , பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளியுள்ளார்கள் இந்த கயவர்கள்.
Sunday, January 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment