ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை இழிவுபடுத்தி பேசியதாக தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல்ஹாசன், மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் அவர் விமர்சித்து இருந்தார்.
இதை தொடர்ந்து வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசன் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Friday, January 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment