Tuesday, January 2, 2018

“மத்திய வங்கி பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். குறித்த அறிக்கையிலுள்ள விடயங்களை தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக் கோரவிருக்கின்றோம்.” என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய உரிமை உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக அறிக்கையிலுள்ள விடயங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தவைரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஒரு விசாரணை அறிக்கை மூலம் ஏனைய விசாரணை அறிக்கைகள் மூடப்பட்டு விடக்கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், ஏனைய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer