கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகை திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர்.
இவரை விவாகரத்து செய்து விட்டு திலீப் மற்றொரு நடிகையான காவ்யா மாதவனை திருமணம் செய்தார். நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் கணவருக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் மஞ்சுவாரியர் துணிச்சலுடன் செயல்பட்டார். இந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கேரளாவில் ஆளும்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முக்கிய பிரமுகர்கள் மஞ்சுவாரியரை சந்தித்து பேசினர்.
அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நடத்தும் முக்கிய கூட்டங்களில் மஞ்சுவாரியர் கட்சியின் கொள்கைகள் குறித்து முழங்கி வருகிறார்.
இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மஞ்சுவாரியரை எர்ணாகுளம் தொகுதியில் களம் இறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Thursday, January 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment