“நான் அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிவேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த 6 நாட்களாக ரஜினி, தனது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை 7வது நாள் காலை ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே, தனது அரசியல் வருகை பற்றி உறுதி வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் நினைத்திருந்தால், 1996ஆம் ஆண்டே முதல்வர் நாற்காலியை அடைந்திருப்பேன். ஆனால், எனக்கு பதவி ஆசை கிடையாது. நான், பதவிக்காகவோ, புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. கெட்டுப்போயிருக்கிற அரசியலை திருத்துவதற்காகவே வருகிறேன்.“ என்றுள்ளார்.
Home
»
Tamizhagam
»
அரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ரஜினி அறிவிப்பு!
Sunday, December 31, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment