Tuesday, January 30, 2018

பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்திலுள்ள மாயோன் எரிமலை கடந்த இரு வாரங்களாக சாம்பலையும் புகை மூட்டத்தையும் லாவாக்களையும் கக்கி வருகின்றது. இதனால் இந்த எரிமலை இன்னும் சில நாட்களில் வெடித்துச் சிதறும் எனவும் இதன் பின் அது எரிமலைக் குழம்பான லாவாவைத் தீவிரமாக வெளியேற்றும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தற்போது இந்த எரிமலையைச் சுற்றி 7  Km தொலைவில் வசிக்கும் அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப் பட்ட சுமார் 84 000 பேர் தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். சுமார் 1 1/2 Km தொலைவுக்கு இந்த எரிமலை சாம்பல் படிந்துள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பால் கேமலிக் மற்றும் கைனோபட்டன் ஆகிய நகரங்கள் சாம்பலால் பெருமளவு மூடப் பட்டுள்ளன.

இந்நிலையில் மாயோன் எரிமலையைச் சுற்றியுள்ள நிலப் பரப்பில் இனிமேல் மனிதர்கள் வசிக்கக் கூடாது என்ற திட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு பரிந்துரைத்துள்ளது.

மேலும் இந்த எரிமலை வெடிப்பால் பொது மக்கள் பாதிக்கப் படாதிருக்க பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை பிலிப்பைன்ஸ் அரசு ஆலோசித்து வருகின்றது. இதற்கு முன்னதாக 1814 ஆம் ஆண்டு மாயோன் எரிமலை வெடித்துச் சிதறியதால் 2200 பேர் உயிரிழந்ததாக வரலாற்றில் பதிவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer