எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி தென்கொரியாவின் பியான் சாங் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தமது அணியை அனுப்பவுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது. இது தொடர்பாக இரு நாட்டு எல்லையில் உள்ள பான்முன்ஜோங் கிராமத்தில் உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 550 பேர் அடங்கிய குழுவை அனுப்பி வைக்க வடகொரியா உடன்பட்டது. ஆயினும் தற்போது இந்தக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ள கலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்கப் போவதில்லை என வடகொரியா திடீரென அறிவித்துள்ளது.
மேலும் தன்னைத் தவறாக விமர்சித்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகத் தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஊடகங்களுக்குப் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 30, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment