“தமிழக அரசியலில் ஒரே நாளில் மாற்றம் வந்து விடாது, மாற்றம் ஏற்பட சிறிது காலம் ஆகும்.” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருமையிச்சசூர் லலிதாம்பிகை கோயிலில் தினகரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என கூறினீர்களே அது எப்போது என செய்தியாளர்கள் வினவினர்.
அதற்கு பதிலளித்து பேசிய தினகரன, “ தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடந்து விடாது.” என்றார்.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என தினகரன் கூறிவந்தார். ஆனால் அதுவரை அவர் இருக்க மாட்டார் என்றும், போக வேண்டிய இடத்திற்கு போய்விடுவார் என்றும் முதல்வர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட சிறிது காலம் ஆகும் என தினகரன் கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, January 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment